பேசத் தொடங்கிவிட்டோம்
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்
வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்
நாங்கள்
உங்கள் நிலங்களை
உழுதோம்
நீங்கள்
எங்கள் பசியை
அறுவடை செய்தீர்கள்
அந்த நிலமும்
எங்களுடையதுதானென்பது
அப்போது எங்களுக்குத் தெரியாது
உங்கள் அடுப்புகள் எரிய
விறகுகள் வெட்டினோம்
நீங்கள்
எங்கள் குடிசைகளை
எரித்தீர்கள்
கோடரிகளும் ஆயுதமென்பதை
அப்போது நாங்கள்
அறிந்திருக்கவில்லை
உங்கள் பெண்களின்
தீட்டுத் துணிகளையும்
துவைத்துக்கொடுத்தோம்
நீங்கள்
எங்கள் பெண்களின்
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்
அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று
வாழ்வின்
கூட்டல் கழித்தல் கணக்குப் போட
எங்கள் முதுகு உங்களுக்குக்
கரும்பலகையானது
அப்போது எங்களுக்கு
எழுதப் படிக்கத் தெரியாது
இப்போது நாங்கள்
படிக்கத் தொடங்கிவிட்டோம்
எழுத்துக்களைக் கூட்டி மட்டுமல்ல
எங்களையும் கூட்டி
செத்துப்போன
மாட்டின் தோலையும்
அதிர...அதிர
நியாயம் கேட்கவைக்கும்
பறையின் குரல்
எங்களுடையது
நாங்கள்
பேசத் தொடங்கிவிட்டோம்
-பழநிபாரதி
நன்றி:
http://www.updrf.blogspot.com/
எங்கள் வார்த்தைகள்
நாறத்தான் செய்யும்
வாய் நாற்றமல்ல அது
வலுக்கட்டாயமாய் எம்
வாய்திறந்து ஊட்டிய
உங்கள் ஆணவ மலத்தின்
துர்நாற்றம்
நாங்கள்
உங்கள் நிலங்களை
உழுதோம்
நீங்கள்
எங்கள் பசியை
அறுவடை செய்தீர்கள்
அந்த நிலமும்
எங்களுடையதுதானென்பது
அப்போது எங்களுக்குத் தெரியாது
உங்கள் அடுப்புகள் எரிய
விறகுகள் வெட்டினோம்
நீங்கள்
எங்கள் குடிசைகளை
எரித்தீர்கள்
கோடரிகளும் ஆயுதமென்பதை
அப்போது நாங்கள்
அறிந்திருக்கவில்லை
உங்கள் பெண்களின்
தீட்டுத் துணிகளையும்
துவைத்துக்கொடுத்தோம்
நீங்கள்
எங்கள் பெண்களின்
நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்
அப்போது எங்களுக்குத் தெரியாது
கருத்த தோலே எங்களின்
கனத்த ஆடையென்று
வாழ்வின்
கூட்டல் கழித்தல் கணக்குப் போட
எங்கள் முதுகு உங்களுக்குக்
கரும்பலகையானது
அப்போது எங்களுக்கு
எழுதப் படிக்கத் தெரியாது
இப்போது நாங்கள்
படிக்கத் தொடங்கிவிட்டோம்
எழுத்துக்களைக் கூட்டி மட்டுமல்ல
எங்களையும் கூட்டி
செத்துப்போன
மாட்டின் தோலையும்
அதிர...அதிர
நியாயம் கேட்கவைக்கும்
பறையின் குரல்
எங்களுடையது
நாங்கள்
பேசத் தொடங்கிவிட்டோம்
-பழநிபாரதி
நன்றி:
http://www.updrf.blogspot.com/
வணக்கம்!
ReplyDeleteஇடியெனத் தந்த எழுத்தினைக் கண்டேன்
விடியலை நோக்கும் விழி
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
ReplyDeleteஉள்ளத்தில்லிருந்து பிறந்த வார்த்தைகளை கவியாக்கிய விதம் கண்டு மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நியாயம் நீதி கேட்கிறது .. நாளைய விடியலுக்காக...
ReplyDeletehttps://www.scientificjudgment.com/