Thursday, June 12, 2014

காணாமல் போதல்

 

அடர்ந்த காடுகளைப் 
பார்க்கும்போதெல்லாம் 
உள்ளே நுழைந்து 
காணாமல் போகவேண்டுமென்று 
ஆசை 
ஆனால் அதற்கு  முன்னால் 
 வாழ்தலில் 
சிதறிக் கிடக்கும் என்னைப் 
பொறுக்கி 
ஒன்று சேர்க்க வேண்டும்.
 
 
அப்துல் ரகுமான் 
'பறவையின் பாதை'  
பக்கம் - 61.

கவிதைகள்.

நன்றி.

Friday, June 6, 2014

கோபம்

* எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றி கொண்டவன் ஆகிறான்.

* கோபம் கொப்பளிக்கும் அந்த ஒரு கணத்தில் நீ பொறுமை காத்தால் நூறு நாள் துன்பத்தில் இருந்து தப்பி விடுவாய்.

* கோபத்தை வெளிக்காட்டுவது குளவிக்கூட்டின் மீது கல்லெறிவதற்குச்  சமமானது.

* கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அதைத் தாமதப்படுத்துவது.

* ஒரு கண நேரத்தின் கோபத்தை அடக்கி வைப்பவன் ஒரு நாளைய துயரத்தை அடக்கியவனாவான்.


* கோபம் தலைதூக்கும் போது அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

* கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது.
அமைதியான, மன்னிக்கக்கூடிய , சமநோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.

* சினத்தை ஒழிக்க வேண்டும். சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை.

 

படித்ததில் பிடித்தது 
உதய சூரியன் 
வார  இதழ், இலங்கை,
பக்கம் - 06,
2014.06.05 தின பதிப்பு.

நன்றி.