Monday, October 11, 2010

பட்டினி சிகிச்சை!

தூறல் - 05 
'பட்டினி சிகிச்சையா? பட்டினி எப்படி சிகிச்சையாகும்? இதென்ன புதுசா கண்டுபிடிச்சாங்களா?' என்று கேட்கிறீர்களா? இது சிகிச்சைதான். ஆனால் புதிய கண்டுபிடிப்பல்ல. நமது பண்டைய இந்தியாவில் பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட முறையே இது. இப்போது இது அறிவியல் அவதாரம் எடுத்திருக்கிறது. அவ்வளவுதான். ஒரு மனிதனுக்கு சுத்தமாக உணவே கிடைக்காதபோது அல்லது உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ச்சியாக நீடிக்கும்போது அவனுக்கு மரணம் சம்பவிக்கலாம்.ஆனால் இந்த சிகிச்சையில் மரணம் சம்பவிக்காது என்பதுடன் நோயும் பூரணமாகக் குணமாகிறது.நோயாளி மற்றும் அவரின் குடும்பத்தவர்களின் பூரண அனுமதியுடனேயே 'பட்டினி சிகிச்சை' மேற்கொள்ளப்படுகிறது.பட்டினிக் காலம் 20முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கிறது. முக்கியமாக , இச் சிகிச்சைக்கு ஏற்புடைய உடல் கட்டமைப்பைக் கொண்டவர்கள் மட்டுமே இதற்கென தெரிவு செய்யப் படுகின்றனர்.  

சிகிச்சைக்குட்படுத்தப்படும் நோயாளிக்கு குடிப்பதற்கு போதுமான நீர் வழங்கப்படுகிறது. வேறு எந்த உணவும் வழங்கப்படுவதில்லை. உடலானது தனக்கு உணவு கிடைக்காத பட்சத்தில் தன்னுள்ளேயுள்ள சேமிப்பு ஆற்றலையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இதன்போது உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தும் இல்லாதொழிக்கப்படுகின்றன.  முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்கள் வரையில் நோயாளி பட்டினி இருக்கும்போது அவரது உடல் புனரமைக்கப்படுகிறது. இக்கட்டத்தில் நோயாளிக்கு' கோரப்பசி' ஏற்படும். 

இதன்போதுதான் இரண்டாம்கட்ட சிகிச்சை கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட சிகிச்சை உணவைத் தவிர்ப்பது. இரண்டாம் கட்ட சிகிச்சை உணவை வழங்குவது. முதலில் நீர்த்த பழச்சாறு கொடுக்கப்படும். பின் நீர் சேர்க்காத பழச்சாறு, கஞ்சி, காய்கறி சூப் என படிப்படியாக ஒவ்வொரு உணவாக வழங்கப்படும். முக்கியமாக வழக்கமான முழு உணவும் இரண்டாம்கட்ட சிகிச்சையின் முப்பது அல்லது நாற்பது ஆவது நாளில்தான் கொடுக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் மூலம் நோய் குணமாவதுடன் மனநலமும் உடல்நலமும் மேம்படுகிறது. இது சீரான மருத்துவ மேற்பார்வையின் கீழேயே மேற்கொள்ளப்பட வேண்டும். (யாரும் சுய பரீட்சை செய்து  பார்க்கக் கூடாது.)   


பார்த்தீர்களா! பட்டினி கூட சிகிச்சை முறையாக பயன்படுத்தப் படுகிறது. எதனையும் ஆக்கத்திற்கு பயன்படுத்தினால் என்றும் வெற்றி நிச்சயமே! 

4 comments:

  1. வணக்கம் நண்பாண!!!!!!!!பட்டினிச்சிகிச்சை அசத்தல்.நல்ல ளை ஒரு முறை முயன்று பார்க்க நினைத்தேன்.பின் தான் இறுதிப்பகுதி வாசித்தேன்.மிக்க நன்றிப்பா..!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிசயா. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் உள்ளமே.

      Delete
  2. அப்படியா! ஆச்சரியமா உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியங்கள் நிறைந்தது தானே இந்த உலகம்? நன்றி தோழி.

      Delete