Friday, September 3, 2010

உலகம் அழியப் போகிறதா?

தூறல் 1

2012 டிசம்பர் 21  ஆம் திகதி உலகம் அழியும் என்று கணிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. மத்திய அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் காணப் பட்ட 'மாயன் நாட்காட்டி'இலேயே மேற்படி உலக அழிவுக்கான திகதி குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 



இப்படிதான் 2000  ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ளதாக சிலர் வதந்தியைப் பரப்பினர் . ஆனால் அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல.இந்த 'உலக அழிவை எதிர்வுகூறும்' மாயன் நாட்காட்டியை உருவாக்கிய மாயன்  நாகரிகம் இப்போது முற்றாக அழிந்து விட்டதாம் . தமது சமூகத்தின் அழிவையே கணிக்க முடியாத இவர்களால் உலக அழிவை எப்படி எதிர்வு கூற முடியும் என்று சிலர் வினவுகிறார்கள். விஞ்ஞானிகளே இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தமது மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்கிறார்களாம் . 


இந்தச் செய்தி வெளியானதில் இருந்து செவ்வாய்க்  கிரகத்திலும் நிலவிலும் காணி விற்பனை மிக வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருகிறது. 'என்னது? செவ்வாயில் காணி விற்பனையா?' என்று அதிசயப் படுகிறீர்களா? இதென்ன பிரமாதம், செவ்வாய்க் கிரகத்தில் நான் வாங்கிய காணியில் புதிதாக ஒரு வீடு கட்டி இருக்கிறேன். அடுத்த வாரம் பால் காய்ச்சப் போகிறேன். முகவரி சொல்றேன், அவசியம் வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. 
சிகரம் பாரதி, இல:100 , செவ்வாய் குறுக்குச் சந்து (பேருந்துநிலையம் அருகில்), செவ்வாய். வருவீங்கல்ல?!?!?!?!?

4 comments:

  1. முயற்சிக்கு வாழ்த்துக்கள். உலக அழிவைப் பற்றிய நிஜத்தை வலியுறுத்தி சென்ற உங்கள் கட்டுரைக்கு நானும் ஒரு ரசிகராகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி.

      Delete
  2. ஆம், நண்பனே வாழ்க்கை என்பது விளையாட்டல்ல, உண்மைதான்

    ReplyDelete